Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞர்கள்… திகிலூட்டும் பேச்சி பட டிரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பால சரவணன், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சி. ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலரை தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

அந்த டிரைலரில், பால சரவணன், காயத்ரி சங்கர் தங்களது நண்பர்களுடன் ஒரு காட்டு பகுதிக்கு செல்கிறார்கள். அப்போது மலைவாழ் மக்கள் வாழும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அவர்கள் நுழைந்து விட, பெரும் ஆபத்துக்கள் அவர்களை துரத்துகிறது. இந்த ஆபத்திலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை என்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த பேச்சி படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக ஹாரர் திரில்லர் வகையான படங்கள் தமிழில் தற்போது எல்லாம் நகைச்சுவை கலந்த வண்ணமே வெளிவருகின்றன. இந்நிலையில் இந்த பேச்சி திரைப்படத்தின் ட்ரெய்லர் படம் முழுவதும் திகிலூட்டும் அனுபவங்களை அளிக்கும் என்ற எண்ணத்தையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News