தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத், 2012ல் தனுஷ் நடித்த “3” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் “நா ரெடி”, “ஹுக்கும்”, “டிப்பம் டப்பம்”, “சாலேயா” போன்ற பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார்.

அனிருத் தற்போது அஜித்தின் “விடாமுயற்சி”, விஜய்யின் “தளபதி 69”, சிவகார்த்திகேயனின் “எஸ்.கே.23” மற்றும் ஷாருக்கானின் அடுத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து பல முக்கிய படங்கள் கைவசம் உள்ள நிலையில், அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ஒரு படத்துக்கு ரூ.10 முதல் 12 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனிருத்தின் பின்னால் ஏ.ஆர். ரஹ்மானும் தனது சம்பளத்தை உயர்த்தி, ராம் சரண் நடிக்கும் “ஆர்.சி.16” படத்திற்காக ரூ.10 கோடி சம்பளம் பெறுவதாக தெரிகிறது. அதேபோல், “புஷ்பா: தி ரைஸ்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது சம்பளத்தை ரூ.8 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.