Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த மிஷ்கின் ! பிசாசு 2 படத்திற்கு முன்பே வெளியிட திட்டம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிஷ்கினின் பிசாசு 2 ரிலீசுக்கு தயாராக இருந்தும் பல மாதங்கள் கிடப்பில் போடப்பட்டது. படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே பெரும் வெற்றியைப் பெற்றது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகை ஆண்ட்ரியா வைத்து இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார்.

இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா , ராஜ்குமார் பிச்சுமணி, நமிதா கிருஷ்ணமூர்த்தி, ஷாம்னா காசிம், விஜய் சேதுபதி, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலரும் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் சேதுபதி நடிப்பில் ‛ட்ரெயின்’ என்ற படத்தின் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கினார். இப்படத்திற்காக ரயில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளது.

மேலும், பிசாசு 2 படத்திற்கு முன்பே ‛ட்ரெயின்’ படத்தை வெளியிட மிஷ்கின் திட்டமிட்டுள்ளார். எஸ்.தாணு தயாரித்த இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் வினய் ராய், பாவனா, நாசர், கே. எஸ். ரவிக்குமார், கனிகா, சிங்கபுலி, பப்லு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இயக்குனர் மிஷ்கினே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News