சிலம்பரசன் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘அரசன்’. ‘தக் லைப்’ படத்திற்குப் பின் உருவாகும் இந்த படம், வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிலம்பரசன் இளமை மற்றும் முதிய தோற்றம் என இரு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் புரோமோ வீடியோ இன்று (அக்.16) மாலை 6.02 மணிக்கு தியேட்டர்களில், நாளை (அக்.17) காலை 10.06 மணிக்கு யூடியூப்பில் வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார்.
இதுகுறித்து நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “வெற்றி மாறன் சாரின் ‘அரசன்’ புரோமோவை தியேட்டர் வெர்ஷனில் மியூசிக்கோடு பார்த்தேன். நான் சொல்றேன், டைம் கிடைச்சா தியேட்டர்ல பாருங்க. தியேட்டரிக்கல் அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க…” என்று கூறியுள்ளார். சிலம்பரசனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.