சில படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து, பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் சிறப்பாக நடித்து கவனம் பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர், ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தாயாக துணிச்சலாக நடித்தார். இந்தப் படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.


விஜய் சேதுபதியுடன் அதிகப்படங்கள் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்தில், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. ‘டிரைவர் ஜமுனா’, ‘திட்டம் இரண்டு’, ‘கணவர் பெயர் ரணசிங்கம்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ போன்ற சில படங்களில் நடித்தார்.


தமிழ் படங்களில் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தென்னிந்தியாவின் பிஸி நடிகையாக விளங்கும் ஐஸ்வர்யா, தற்போது அமெரிக்காவில் விடுமுறையை அனுபவித்து வருகிறார். பல்வேறு போஸ் மாடர்ன் உடையில் எடுத்த அவரது கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.