டிடி நீலகண்டன் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக உள்ளார். விஜய் டிவியில் 1999-ஆம் ஆண்டு ஒளிபரப்பான உங்கள் தீர்ப்பு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் vs கேர்ள்ஸ், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, அச்சம் தவிர், என்கிட்ட மோதாதே, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.



சுபயாத்ரா எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1990 ஆம் ஆண்டிலேயே சினிமாவில் அறிமுகமானவர் டிடி நீலகண்டன். அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு ஜெயராம் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ஜூலி கணபதி படத்தில் நடித்தார். திவ்யதர்ஷினி மாதவன் நடித்த நளதமயந்தி, ஷெரின் நடித்த விசில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, தனுஷ் இயக்கத்தில் வெளியான ப. பாண்டி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல், கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஜோஷ்வா இமை போல் காக்க போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் இவர் நடித்துள்ளார்


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களையும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் டிடி நீலகண்டன், தற்போது துபாயில் சுற்றுலா சென்று அங்கே குட்டி கவுன் அணிந்து எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிடி நீலகண்டன் போட்டாலே டிரெண்டாகி விடும் நிலையில், இந்த போஸ்ட்டுக்கும் ஏகப்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
Video Link: https://www.instagram.com/reel/C6gZ8gxyQlb/?igsh=amxxcXEycHN2Z3dh