மலையாள சினிமா துறையில் தனது கேரியரை தொடங்கிய அனிகா, தமிழில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அறிமுகமானவர். பின்னர், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான “விஸ்வாசம்” படத்தில் அஜித் – நயன்தாராவின் மகளாக நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. குறிப்பாக க்ளைமேக்ஸில் அவருக்கும், அஜித்துக்கும் இடையிலான காட்சி பலரையும் உணர்ச்சிமயமாக்கியது. முக்கியமாக, விஸ்வாசம் படத்திலிருந்து அனிகாவை பலரும் குட்டி நயன்தாரா என்றெல்லாம் அழைத்தார்கள்.


தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா, புட்டபொம்மா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், மலையாளத்திலும் ஹீரோயினாக களமிறங்கிய அவர் “ஓ மை டார்லிங்” படத்தில் நடித்தார். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அனிகா ஓவர் கவர்ச்சி காட்டியதாக கூறப்பட்டது. படம் பிப்ரவரி மாதம் வெளியானது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இவர் கடைசியாக “PT சார்” என்ற படத்தில் நடித்திருந்தார்.






இதற்கிடையே படங்களில் பிஸியாக இருந்தாலும், அனிகா சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாக இருப்பார். தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். அந்த வகையில், அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.