பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் இளைய மகனும் நடிகருமான பிரேம்ஜியின் திருமணத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா வராதது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
இளையராஜாவின் குடும்பத்திலிருந்து யாரும் வராதது பற்றிய கேள்விகளும் உலாவின. இந்நிலையில், அந்த நாளில் இளையராஜா வேறு ஒரு இசை பணியில் ஈடுபட்டிருந்ததால் வர முடியவில்லை என தகவல் வெளியானது. மேலும், யுவன் சங்கர் ராஜா பிஸியான சூழலில் இருந்தால் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இளையராஜாவிடம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இந்து வாழ்த்து பெற்ற புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்திற்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என சொல்லப்படுகிறது