இயக்குனர் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன், புதிதாக மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஹிந்தியில் ‘பதாய் டோ’ மற்றும் ‘ஹனிமூன் போட்டோகிராபர், உண்டேகி’ என சில வெப் சீரியல்களில் நடித்துள்ள அபேக்ஷா போர்வலும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஜெயிலர் – 2 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அபேக்ஷா போர்வலும் இணைந்து நடித்து வருகிறார்.

