Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஜூன் 20ல் மீண்டும் தொடங்குகிறதா அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்கள் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க அஜித் குமார் தொடங்கினார்.

ஹைதராபாத்தில் நடந்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாளை (ஜூன் 7ம் தேதி) முடிவடைய இருக்கிறது. அதன்பின், ஜூன் 20ம் தேதி முதல் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அஜித் குமார் மீண்டும் கலந்துகொள்கிறாராம்.

அஜர்பைஜானில் 40 நாட்கள் நடைபெறவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில், அஜித்துடன் திரிஷா, ரெஜினா நடிக்கும் காட்சிகள் மற்றும் ஆக்சன், பாடல் காட்சிகள் இடம்பெற உள்ளன. அதன் பிறகு, ஜப்பானில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அஜித் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News