Thursday, October 3, 2024

ஜி.வி.பிரகாஷ்-ன் 700வது பாடலாக உருவான அமரன் படத்தின் ‘ஹே மின்னலே’ #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் “அமரன்” ஆகும். கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் “முகுந்தன்” என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார்.

புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “ஹே மின்னலே” நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடல் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலாக உருவாகியுள்ளது. தற்போது “ஹே மின்னலே” பாடலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா எழுதிய வரிகளில் ஷ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலின் மூலம் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News