இயக்குனராக முதன்முறையாக அறிமுகமாகும் சண்முகம் முத்துசாமியின் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “அடங்காதே”. இதில் அவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் ஆகியோரும் நடித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.எஸ். சரவணன் தயாரித்துள்ளார். இ5 நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்று, உலகம் முழுவதும் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு மதங்களுக்கு இடையேயான கதைக்களத்தில் இது ஒரு அரசியல் பிணைந்த திரில்லர் திரைப்படம். சமகால அரசியல் பேசும் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.