நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து நடிக்க ‘காதலிக்க யாரும் இல்லை’ என்ற திரைப்படத்தில் நாயகியாக ரைசா ஒப்பந்தமானார்.

இந்த திரைப்படத்தை இயக்கி வந்தவர் அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ். இவரது ‘ஹைவே காதலி’ என்ற குறும்படம் பலராலும் பாராட்டப்பட்டது. அதனாலேயே ‘காதலிக்க யாருமில்லை’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமாரே பணியாற்றினார். ஆனால், இந்த படம் பற்றிய எந்தவொரு தகவலும் தற்போதுவரை வெளியாகவில்லை, மாறாக ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் தொடர்ந்து பல திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன. இதனால் ‘காதலிக்க யாருமில்லை’ படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் இல்லாத நிலை தொடர்கிறது.