அஜித் ரசிகர்கள் “விடாமுயற்சி” குறித்த புதிய தகவலை எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. மேலும், படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும், “விடாமுயற்சி” குறித்து எதுவும் தெரியாததால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

“குட் பேட் அக்லி” படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் தொடங்கவிருப்பதாகவும், அதற்காக படக்குழு ஜப்பான் செல்லவிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. “குட் பேட் அக்லி” படப்பிடிப்பு வேகமாக நடந்தாலும், “விடாமுயற்சி” குறித்து தகவல் அறியாமலே ஏகே ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். மகிழ் திருமேனி அஜித்தை வைத்து எப்படி படம் எடுத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அவர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். ஆனால் “விடாமுயற்சி” என்ன ஆனதென்று தெரியவில்லை.

சில நாட்களுக்கு முன் “விடாமுயற்சி” படத்தின் 90 சதவீதம் ஷூட்டிங் முடிந்துவிட்டது, மேலும் கொஞ்சமே உள்ளதென்று தகவல் பரவியது. எனவே, படத்தை இந்த வருடத்துக்குள் வெளியிட மகிழ் திருமேனி முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையை பார்த்து, “விடாமுயற்சி” என்ன நிலையில் உள்ளது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.


