Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

சோலோவாக களமிறங்கிய ‘தேவரா’ திரைப்படம்… முதல் வசூல் எவ்வளவு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று வெளியான பான் இந்தியா தெலுங்குப் படம் ‘தேவரா 1’. இந்தப் படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, ஆனால் மற்ற மாநிலங்களில் வெகுஜனமான வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போதைய பாக்ஸ் ஆபீஸ் தகவல்களின்படி, இப்படம் முதல் நாள் 100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர் தனிப்பட்ட கதாநாயகனாக செய்துள்ள முதல் பெரிய வசூல் சாதனை இது. இதற்கு முன்பாக, அவர் 2018ல் வெளியான ‘அரவிந்த சமேத வீரராகவா’ என்ற தனி கதாநாயக படத்தில் முதல் நாள் 60 கோடி வசூலித்ததுதான் அதிகமாக இருந்தது. இரு கதாநாயகர்களில் ஒருவராக ராம்சரணுடன் இணைந்து நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் முதல் நாள் 200 கோடியைத் தாண்டி வசூலித்தது.

இந்த ஆண்டில் வெளியான படங்களில் இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த இரண்டாவது படமாகவும் இது திகழ்கிறது. முதலிடத்தில் ‘கல்கி 2898 ஏடி’ படம் இருக்கிறது. ‘ஸ்திரீ 2’ படம் முன்பு இரண்டாவது இடத்தில் இருந்தது, அதன் வசூலான 65 கோடியை ‘தேவரா 1’ படம் கடந்துவிட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.இந்த தகவல்கள் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களிலிருந்து பெறப்பட்டவை. ஆனால், இவர்கள் யாரும் தமிழில் வெளிவந்த ‘தி கோட்’ படத்தின் முதல் நாள் உலக வசூலான 126 கோடியைப் பற்றி பேசாமல் விட்டது ஆச்சரியமாக உள்ளது. ‘தேவரா 1’ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் தகவல்கள் வந்தபின் இதுகுறித்து முழு விவரம் தெரியும்.

- Advertisement -

Read more

Local News