நடிகை பிரனீதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் அறிமுகமான இவர், 2011இல் தமிழ் படத்தில் அறிமுகமானார்.அதன் பின்னர், சகுனி, மாஸ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இந்த படங்கள் எதுவும் பெரிய வெற்றி பெறாததால், பிரனீதா தமிழில் மேலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடித்தார், ஆனால் அதுவும் வரவேற்பில்லாமல் போனது.

இதையடுத்து, 2021இல் பெங்களூர் தொழிலதிபர் நிதின் ராஜுவுடன் திருமணம் செய்து கொண்டார். கொரோனா காலத்தில் நடந்த இந்த எளிமையான திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இப்போது பிரனீதாவிற்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது.


திருமணம், குழந்தை பிறப்பிற்குப் பின்னர், பிரனீதா சினிமாவில் மீண்டும் தலைநிமிர்ந்து நடிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் தங்கமணி, பிராமண அவதாரா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் பல கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு தனது திருமண வாழ்க்கையுடன் சினிமா வாழ்க்கையையும் சமநிலையில் பராமரித்து வருகிறார் பிரனீதா சுபாஷ்.இந்நிலையில் பாத் டப்பில் குளித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரனீதா சுபாஷ்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.