சென்னை 28, சரோஜா, கோவா போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் வைபவ் சிறப்பாக நடித்துள்ளார். கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர், 2017ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்தார்.அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.

அவர் கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, வைபவ் “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி போன்ற பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. படத்தில் வைபவின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டது.

தற்போது, படத்தில் நடித்த மொட்ட ராஜேந்திரன் மற்றும் ஆனந்த் ராஜ் கதாபாத்திரங்கள் குறித்த போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. ராஜேந்திரன் “மெமரி தாஸ்” என்ற கதாபாத்திரத்தில், ஆனந்தராஜ் “ஸ்பிலிட் சூசை” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த பெயர்கள் மிகவும் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் உள்ளன. திரைப்படம் முழுவதும் ஒரு காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.