Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சூர்யா அந்த படத்தோட அந்த காட்சியில நடிக்க ரொம்பவே தயங்கினார்… இயக்குனர் ஒருவர் சொன்ன சுவாரஸ்யம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கங்குவா படம், சூர்யாவுக்கும் சிவாவுக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. எனவே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிவா. ஞானவேல் ராஜா இந்த படத்தை பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளார். பல மொழிகளில் படம் வெளியாகவிருக்கிறது. சூர்யாவின் கரியரில் இதுதான் ஹை பட்ஜெட் படம். ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததற்கான அறிவிப்பை க்ளிம்ப்ஸ் வீடியோவுடன் படக்குழு வெளியிட்டது. அதில் சூர்யாவின் லுக்கை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள். இந்தப் படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என்று ஃபேன்ஸ் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், மறைந்த இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து சூர்யா குறித்து அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த பேட்டியில் அவர், “ஒரு புதுமுக நடிகரை வேலை வாங்க வேண்டும். நான் ‘நேருக்கு நேர்’ படத்தில் வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்தேன். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் சூர்யா சிம்ரனை கட்டிப்பிடிக்க வசந்த் சொன்னார். ஆனால், சூர்யாவால் அது முடியவில்லை. தயங்கி, நடிக்க தொடங்கினார். ஆனால், பின்னர் அது நடிப்பாகும் என்று புரிந்துகொண்டு நடிக்கத் தொடங்கினார்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News