Tuesday, September 17, 2024

சூரியை வைத்து லிங்குசாமி போட்ட ஸ்கெட்ச்… நழுவும் சூரி இதுதான் காரணமாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூரி இரண்டாம் முறையாக ஹீரோவாக நடித்துள்ள “கருடன்” திரைப்படத்திற்கு மக்களிடமிருந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த பாராட்டுகளால் சூரி மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

முன்னதாக “விடுதலை” படத்தில் அவரது அசாத்திய நடிப்பின் மூலம் சூரி தனது காமெடி மட்டுமின்றி சீரியஸான கதாபாத்திரங்களிலும் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபித்தார். இதனால் “விடுதலை பாகம் 1” வெளியானதும், ரசிகர்கள் “விடுதலை பாகம் 2” எப்போது வரும் என கேட்க ஆரம்பித்தனர்.

தமிழில் எதார்த்த ஹீரோவாக மாறிவரும் சூரி மீண்டும் காமெடியனாக நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், இயக்குனர் லிங்குசாமி சூரியுடன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே, லிங்குசாமி இயக்கத்தில் “அஞ்சான்” மற்றும் “சண்டக்கோழி 2” படங்களில் சூரி நடித்துள்ளார்.

சூரி தற்போது மார்க்கெட் உள்ள நடிகராக மாறியதால், அவரை வைத்து தமிழில் கம் பேக் கொடுக்கலாம் என லிங்குசாமி முடிவு செய்துள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால், சூரி, லிங்குசாமிக்கு கால்ஷீட் கொடுக்க தயங்குகிறார் என்ற தகவலும் உள்ளது. இதற்கு காரணம், சூரியுடன் லிங்குசாமி முழுக்க முழுக்க காமெடி படம் எடுக்க திட்டமிட்டிருப்பது, மேலும் சூரி மீண்டும் காமெடி ட்ராக்கில் போக விரும்பாதது என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில், லிங்குசாமி “பையா 2” படத்தை உருவாக்குவதிலும், ஹிந்தியில் மகாபாரதத்தை தழுவிய “அபிமன்யூ” படத்தை எடுப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News