Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சூரியை இயக்குகிறாரா விமல் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இயக்குனர்? #SOORI

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகர் சூரி, விடுதலை படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாக தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் அவர் முதன்மை வேடத்தில் நடித்த ‘கருடன்’ படமும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது அவர் விடுதலை 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதி மட்டுமின்றி சூரியன் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இதே நேரத்தில், ‘கொட்டுக்காளி’ என்ற புதிய படம் வெளியாவதற்குத் தயாராக உள்ளது. இந்த படங்களுக்குப் பிறகு, ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜின் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று கூறப்படுகிறது.

சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே தொடர வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக உள்ள நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் கதையின் நாயகனாக மக்கள் என்னை கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இதே பாதையில் தொடரவே விருப்பப்படுகிறேன் என பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News