கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்த ‘காந்தாரா’ திரைப்படத்தில் சப்தமி கவுடா கதாநாயகியாக நடித்தார். ரிஷப் ஷெட்டி இயக்கிய இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது, ரூ.655 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், முதல் பாகத்தில் நடித்த சப்தமி கவுடா தற்போது சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராமில் அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சப்தமி கவுடா கடைசியாக நிதினுடன் நடித்த ‘தம்முடு’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.