Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சீதா ராமம் படத்தை இயக்கிய இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்… பிரம்மாண்டமாக நடந்த படப்பிடிப்பு பூஜை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஷ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன், அன்னா பென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபாஸ் அடுத்ததாக ஹனு ராகவபுடி இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஹனு ராகவபுடி முன்பு துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகுர் நடித்த ‘சீதா ராமம்’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கியவர். 

இன்று, இப்படத்தின் பூஜை விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்தை மைத்திரி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு ‘ஃபாஜி’ என இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் ஒரு பீரியாடிக் டிராமா கதைக்களத்தில் உருவாகவுள்ளது. விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விழாவில் இயக்குநர்கள் பிரசாந்த் நீல், இமானுவி, மிதுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News