Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் சல்மான்கான்… ட்ரெண்டாகும் கேமியோ ரோல்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

தற்போது எல்லாம் பாலிவுட் கோலிவுட் டோலிவுட் என எல்லா திரையுலகிலும் கேமியோ ரோல் என்பது ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது அடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரித்து, தேசிங்கு பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே23 படத்திலும் தற்போது நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் வில்லனாக நடிக்கிறார்.இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ், சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற பாலிவுட் படத்தை இயக்கவுள்ளார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.அதே சமயம் எஸ்கே 23 படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News