தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருடன் நடித்துள்ள ராகுல் பிரீத் சிங் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதுடன், பட்டாசுகள் வெடிப்பது குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘சிறுவயதில், தீபாவளிக்கு எனது தந்தை ரூ.500 அளித்து பட்டாசு வாங்கினார். ஆனால், பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்த பணத்தை ஏழைகளுக்கு உதவியாக கொடுக்கலாம் அல்லது இனிப்பு சாக்லெட் வாங்கலாம் என்று அவர் கூறினார்.
இது எனக்கு பொருத்தமாகத் தோன்றியது, அந்த நாளில் இருந்து இன்று வரை நான் பட்டாசு வெடித்ததே இல்லை’ என எமோஷனலாக பேசியுள்ளார்.