Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டிய KPY பாலா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் வெங்கல் ராவ் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் தொடர்ந்து நடித்தவர். வடிவேலு – வெங்கல் ராவ் காம்பினேஷனில் வந்த காமெடி காட்சிகள் இன்றளவும் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. கடந்த சில வருடங்களாகவே அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். சூழல் இப்படி இருக்க; தனக்கு கை, கால் விழுந்துவிட்டதாகவும்; எனவே உதவி வேண்டும் என்று கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு வெங்கல் ராவின் கோரிக்கையை அறிந்தவுடனேயே இரண்டு லட்சம் ரூபாய் அளித்தார். இது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வெங்கலுக்கு உதவிய முதல் ஆள் சிம்பு என்பது கவனிக்கத்தக்கது. இதைத்தொடர்ந்து பலருக்கும் உதவிகளை செய்துவரும் KPY பாலாவும் இப்போது வெங்கல் ராவுக்கு உதவியிருக்கிறார். அவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்திருக்கும் அவர், “எனக்கு ரொம்ப பிடித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் அண்ணா உதவி கேட்டதை பார்க்கும்போது எனது மனமே கேட்கவில்லை. எனவே என்னுடைய சொந்த பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை நான் கொடுத்திருக்கிறேன். நீங்களும் உதவுங்கள். சீக்கிரம் அவரை மீண்டும் சினிமாவில் பார்க்க ஆசையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News