Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சினிமா உலகில் முடிவுகள் வெறும் 3 மணி நேரத்திற்குள் தெரிந்துவிடும் – நடிகர் வருண் தேஜ் பளீச் பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நவம்பர் 14ம் தேதி நடிகர் வருண் தேஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மட்கா’ திரைப்படம் பான் இந்தியா ரிலீஸாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: இந்த படம் 60 மற்றும் 70களைக் குறித்த கதையை பேசுவதால், படத்தில் பல விதமான தோற்றங்களில் என்னை பார்க்க முடியும். வித்தியாசமான தோற்றங்களை உருவாக்கிய இயக்குனர் மற்றும் மேக்கப் கலைஞர்களின் திறமைக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

படம் எடுப்பது மிகவும் சவாலான தொழிலாகும். இதற்காக பல ஆண்டுகள் உழைப்பது போலவும், நேரத்தை நிறைய செலவிடுவதும் தவிர்க்க முடியாது. ஆனால், சினிமா உலகில் முடிவுகள் வெறும் 3 மணி நேரத்திற்குள் தெரிந்து விடுகின்றன.

இப்போது பாலிவுட் திரைப்படங்களில் நேரடியாக நடிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. தெலுங்கு படங்கள் ஹிந்தி மொழியில், ஹிந்தி படங்கள் தெலுங்கு மொழியில் டப் செய்யப்படும் நிலையில், மொழி ஒரு தடையல்ல; நல்ல படங்களை உருவாக்குவதுதான் முக்கியம்.

- Advertisement -

Read more

Local News