Tuesday, November 19, 2024

சினிமாவில் கமல்ஹாசனின் 65-வது ஆண்டை சிறப்பித்து ‘தக் லைஃப்’ படக்குழுவினர்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து ‘தக் லைஃப்’ படக்குழுவினர் அதைச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான “களத்தூர் கண்ணம்மா” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசன், இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்து, இந்திய சினிமாவின் தனித்துவமிக்க கலைஞராக உள்ளார்.

பல மொழிகளின் முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் கமல்ஹாசன் சினிமாவுக்கு அளித்த பங்களிப்பைத் தொடர்ந்து வியந்துகொண்டே இருக்கின்றனர். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான “கல்கி” படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், “இந்தியன் 2” திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, கமல்ஹாசன் “தக் லைஃப்” படத்தில் நடித்து வருகிறார், அதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனை கைகட்டி வரவேற்று, சினிமாவில் அவரது 65-வது ஆண்டை சிறப்பித்து ‘தக் லைஃப்’ படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதை ஒட்டி வெளியான புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

- Advertisement -

Read more

Local News