Saturday, September 14, 2024

சினிமாவிற்கு வரும் இளம் தலைமுறைக்கு படிப்பு மிக முக்கியம்… நடிகர் ஹிப் ஹாப் ஆதி OPEN TALK! #Kadasiulagapor

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிப்ஹாப் தமிழா இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் திரைப்படம் ‘கடைசி உலகப் போர்’. நாசர், நட்டி, அனஹா, அழகம் பெருமாள், முனிஷ் காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். போர், ஆக்ஷன், காதல், கருத்து ஆகியவற்றைக் கொண்ட இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் சுந்தர்.சி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

‘கடைசி உலகப் போர்’ படத்தைப் பற்றி பேசும்போது, “தொழில்நுட்பம் இப்போது மிக அதிகமாக வளர்ந்து விட்டது; மூன்றாவது உலகப் போர் நடந்தால் உலகமே இருக்காது என்று நினைக்கிறேன். அதனால் இப்படத்திற்கு ‘கடைசி உலகப் போர்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். போர், காதல், ஆக்ஷன் கலந்த ஒரு ஆழமான கருத்தையும் இப்படத்தில் சொல்லியுள்ளோம். அதுமட்டுமல்ல, இப்படத்தில் ஒன்பது பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை ஆவலுடன் காத்திருக்கிறோம், என்றார்.

சுந்தர். சி என்னை அறிமுகப்படுத்தி, எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்பு வழங்கியவர். அவர் தயாரித்த என் படமும் வெற்றி பெற்றது. இப்போது ‘கடைசி உலகப் போர்’ படத்தை நானே தயாரித்திருக்கிறேன். இதிலிருந்து லாபம் வந்தால் மட்டுமே இனி படங்களைத் தயாரிப்பேன். ‘ஹிப்ஹாப் தமிழா என்டர்டெய்மண்ட்’ நிறுவனம் இருவராக தொடங்கியது. இப்போது எங்களுடன் 110 பேர் இருக்கிறார்கள். திறமையானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கிறோம். சினிமாவிற்கு வரும் இளம் தலைமுறைக்கு படிப்பு மிக முக்கியம்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News