சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி, திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முந்தைய தேர்தலில் இதே திருச்சூரில் தோல்வியுற்ற அவர், இப்போது வெற்றி பெற்று கேரளாவில் முதல் பாஜக எம்பி என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

சிஏஏ மசோதா அமல்படுத்தப்பட்ட போது, அதற்கு எதிராக நடந்த பேரணியில், மலையாள நடிகையும் சித்தா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் நடித்தவருமான நிமிஷா சஜயன், சுரேஷ்கோபியை கிண்டல் செய்து, அவர் திருச்சூரில் தோல்வியடைந்ததை விமர்சித்தார். இதனால் அவர் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.

தற்போது, சுரேஷ்கோபி திருச்சூரில் வெற்றி பெற்ற பிறகு, அவரது ரசிகர்கள் நிமிஷா சஜயனை சோசியல் மீடியாவில் விமர்சிக்க ஆரம்பித்தனர். இதனால் நிமிஷா தனது கமெண்ட் செக்சனை மூடி வைத்தார்.சமீபத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய சுரேஷ்கோபியின் மகனும் நடிகருமான கோகுல் சுரேஷ், “நிமிஷா சஜயன் மீதான இந்த விமர்சன தாக்குதல் வருத்தமளிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் பேசியபோதும் இதேபோன்று எதிர்வினை ஏற்பட்டது. யாரையும் அநாகரிகமாக விமர்சிப்பது தவறு என பேசியுள்ளார்.