நடிகர் சித்தார்த் நடித்த சித்தா படத்தில் துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நிமிஷா சஜயன்.அவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அவர், பழங்குடி பெண்ணாகவும், நிறைமாத கர்ப்பிணியாகவும் நடித்திருந்தார். அவருடைய நடிப்பை லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் பல்வேறு விழாக்களில் பாராட்டினர்.


அடுத்ததாக, ஏ.எல்.விஜய் இயக்கிய, அருண்விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த அவரது நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து, ஜோதிகாவுடன் இணைந்து இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் விரைவில் வெளியாக இருக்கிறது.

சினிமா மற்றும் வெப் தொடர்களில் பிஸியாக நடித்து வரும் நிமிஷா சஜயன், சமூக வலைத்தளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ஒரு அருவியில் மகிழ்ச்சியாக குளிக்கிற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர், குறிப்பாக, நிமிஷா கவர்ச்சியாகவும் போட்டோ ஷூட் பண்றரே என இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.


