Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சார்லி மகன் திருமணம்… கெத்தாக என்ட்ரி கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்ற இயற்பெயர் கொண்டவர் சார்லி. இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், கல்லூரி படிக்கும்போது பல நாடகங்களில் நடித்துள்ளார். முக்கியமாக சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் போன்ற நடிகர்களை அசலாக நகலெடுத்து கல்லூரியில் பிரபலமானார். பின்னர் முழு நேர நாடக நடிகராகி ஆயிரம் நாடகங்களில் நடித்துள்ளார்.

பின்னர் இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்போதிலிருந்து வேல்முருகன் என்ற பெயர் சார்லியாக மாறியது. முதல் படத்திலேயே தனது அசாதாரண நடிப்பால் பாலசந்தரையும் ரசிகர்களையும் கவர்ந்தார். அதன்பின் பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட படங்களில் நடிக்க தொடங்கினார் மற்றும் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார்.தற்போதும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு அஜய் தங்கசாமி என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் அவர் பெர்மிசியாடெமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கமல் ஹாசனும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார், ஊதா தொப்பி, வெள்ளை சட்டை, ஊதா ஜீன்ஸ் அணிந்துள்ளார் அவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News