Tuesday, November 19, 2024

சாய் பல்லவி சொன்ன அவரின் காதல் ரகசியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன்’ன படத்தில், தெலுங்கில் தண்டல் படத்தில், மேலும் ஹிந்தியில் ‘ராமாயணா’ படத்தில் நடித்து, மிகுந்த பிஸியாக உள்ளார். ராமாயணா படத்தில் அவர் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மகாபாரதக் கதையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதிலும், அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை நான் மிகவும் விரும்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளாகவே அபிமன்யுவைப் பற்றி படித்து, அவரைப் பற்றிய பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன். உண்மையாகச் சொல்லப்போனால், அவரை கடந்த பத்து ஆண்டுகளாகவே காதலித்து வருகிறேன் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News