Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூரியின் கொட்டுக்காளி திரைப்படம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிகர் மட்டுமில்லாமல், பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்துள்ளார். அவர் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

அவர் தற்போது தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘கொட்டுக்காளி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கொட்டுக்காளி 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருந்தது. ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த கௌரவம் கிடைப்பது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.அதேபோல, ருமேனியாவின் டிரான்ஸில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படம் கூட இந்த டிரான்ஸில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News