Saturday, April 13, 2024

சம்பளத்திற்காக டீல்…சூரி மற்றும் கவின் பண மழையில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அன்று சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர்கள் இன்று பெரிய கதைநாயாகன்களாக உருவெடுப்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை காட்டுகிறது.சூரி என்ற பெயரோடு வந்து ஓரிரு படங்களில் சிரிய கதாப்பாத்திரத்தில் வந்தவர் புரோட்டா சூரி ஒரே ஒரு படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்து இன்று அவரை கதாநாயகனாக ஆகும் அளவுக்கு அவரை உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது.

கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு சினிமாவில் டாப் ஆக வலம் வந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில கதாநாயகனாக நடித்து பிரம்மிக்க வைத்தார். இந்நாள் வரை காமெடியானக ரசிகர்களை சிரிக்க வைத்த அவர் சீரியஸாக நடித்து சிந்திக்க வைத்து பல பாராட்டுகளை பெற்றார்.எப்போதும் போல ஹீரோவின் நண்பனாக வலம் வந்த சூரியை கதாநாயகனாக பார்த்து ரசித்தனர்.

நடிகர் சூரி விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் இவருக்கு இப்படத்தின் மூலம் கிடைத்த வரவேற்ப்பால் கதாநாயகனாக அடுத்த அடுத்த படங்களில் கதாநாயகனாக கமிட் ஆகியுள்ளார் இவ்வாறு நடிக்க கமிட் ஆகியுள்ள படங்கள் தான் கருடன் மற்றும் கொட்டாகாளி இப்படி சூரியின் மார்க்கெட் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.அதனால் தனது சம்பளத்தை தயாரிப்பாளரிடம் 8 கோடி அளவிற்கு வேண்டுமென்று டீல் பேசி வருவதாக தகவல் வந்துள்ளது.

அதேபோல் நடிகர் கவினும் ஆரம்பத்தில் வாய்ப்பு இல்லாமல் சிறிய ரோல்களில் நடித்தார் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் வரவேற்பை பெற்றார். அதன் பின் அவர் ஹீரோவாக நடித்த இரண்டு படங்களும் ஹிட் ஆனது. முக்கியமாக அதில் டாடா படம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவருடைய மார்க்கெட்டும் அதிகரித்ததால் தற்போது கிஸ் மற்றும் ஸ்டார் போன்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்தால் நஷ்டம் ஏற்படாத அளவுக்கு படம் நல்ல வசூலை பெறுகிறது என்ற நோக்கத்தில் தயாரிப்பாளரிடம் 7 கோடி சம்பளம் வேண்டும் என்று டீல் பேசுகிறாராம்.இப்படி வளர்ந்து வரும் நடிகர்கள் தங்கள் திறமையால் சினிமா மார்கெட்டில் பல மாற்றங்களை உண்டாக்கி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News