Saturday, April 13, 2024

திறக்கப்படுமா வாடிவாசல்? வெற்றிமாறன் சொன்ன நல்ல செய்தி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யாவின் படங்களுக்கு மட்டும் வரும் சோதனையா என்று தெரியவில்லை அவரின் படங்கள் பல தள்ளிப்போவது வழக்கம் ஆகிவிட்டது.இந்த நிலையில் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படம் தள்ளிப்போய் கொண்டே தான் இருக்கிறது.

சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் அவரவரின் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக இருக்க இந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளிவாரத நிலையில் எப்போதோ அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்காத வாடிவாசல் படம் ட்ராப் ஆகிவிட்டது என இணையத்தில் தகவல் பரவிய நிலையில் ஒருவழியாக இந்த படத்தை பற்றிய அப்டேட் ஒன்றை வெற்றிமாறன் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் வெற்றிமாறன். அத்துடன் பல முன்னணி நடிகர்களும் இவரது இயக்கத்தில் நடிக்க தயாராக உள்ளார்கள்.இந்நிலையில் சூர்யா, வெற்றிமாறன் இருவரும் வாடிவாசல் படத்தின் மூலம் முதன் முறையாக கூட்டணி அமைத்தனர் இதனால் இப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு எழுந்தது.

நடிகர் சூரி விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து வெற்றிமாறன் நீண்ட காலமாக விடுதலை படம் தொடர்பான வேலைகளில் தீவிரமாக உள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கி வெளியிட்ட வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தையும் வெளியிட உள்ளார்.இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியின் போது வாடிவாசல் படத்தை பற்றிய கேள்விக்கு பதில் ஒன்றை அளித்திருந்தார் அதாவது விடுதலை 2ம் பாகம்‌ வெளியான உடனே வாடிவாசல் படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கும் எனவும் அதன் பின்னர் வடசென்னை 2 படத்திற்கு இன்னும் நேரம் எடுக்கும் என்று தெரிவித்து உள்ளார். இந்த அப்டேட்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News