“லியோ” திரைப்படத்தில் தன்னை லோகேஷ் கனகராஜ் சரியாக பயன்படுத்தாது எனக்கு வருத்தம் என பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கூறியிருந்தார். அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். அதில், தனது கருத்தை சொன்ன பிறகு சஞ்சய் தத் சார் எனக்கு தொலைபேசியில் அழைத்தார். அப்போது அவர் என்னிடம், ‘நான் வேடிக்கைக்காகதான் அந்த கருத்தை சொன்னேன். ஆனால் சமூக ஊடகங்கள் அதை பெரிதாக்கிவிட்டது. எனக்கு அது சங்கடமாக உள்ளது’ என்று கூறினார்.

நான் எனக்கு எந்த பிரச்சனை இல்லை சார் என பதிலளித்ததாக லோகேஷ் கூறினார். மேலும் அவர் தொடர்ந்தும் கூறுகையில், “நான் எனது படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால் அந்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறேன். நான் ஒரு பெரிய மேதை அல்ல அல்லது சிறந்த இயக்குநர் அல்ல. ஆனால் நிச்சயமாக சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படத்தில் வேலை செய்வேன்” என்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய “லியோ” படத்தில் சஞ்சய் தத், கதாநாயகன் விஜயின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.