அழுத்தமான கதைசொல்லல் மற்றும் வலுவான பெண் கதாநாயகிகளுக்காகப் பாராட்டப்பட்ட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், ‘அருவி’யில் அதிதி பாலனையும், ‘வாழ்’ படத்தில் டி.ஜே. பானுவையும் அறிமுகப்படுத்தினார். இப்போது, ‘சக்தி திருமகன்’ படத்தில் திரிப்தி ரவீந்திராவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி உள்ளார்.திரிப்தி சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்கி கொண்டிருப்பவர், சில விளம்பர படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். ‘தி டே ஆப்’ என்ற குறும்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார். ஹிந்தியில் சின்னத்திரை தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பது இதுவே முதல் முறை. ‘சக்தி திருமகன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு 25வது படமாகும். இவர்கள் தவிர வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், குழந்தை நடிகர் கேசவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
