Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கோல்டன் ஸ்பாரோ’ பாடலை தொடர்ந்து NEEK படத்தின் அடுத்த பாடல் அப்டேட் கொடுத்த ஜிவி.பிரகாஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் சமீபத்தில் “ராயன்” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் மாபெரும் வெற்றியை அடைந்தது. இப்படத்தின் தொடர்ச்சியாக, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” மற்றும் “இட்லி கடை” என்ற திரைப்படங்களை தற்போது தனுஷ் இயக்கி வருகிறார்.

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படம் இளம் சமுதாயத்தில் காதல் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட ஒரு ராம் காம் (ரொமாண்டிக் காமெடி) கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான “கோல்டன் ஸ்பேரோ” பாடல் வெளியிடப்பட்டு, அது பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதன் பின்னர், படத்தின் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என்று ஜி.வி. பிரகாஷ், தனது எக்ஸ் தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) பதிவிட்டுள்ளார். இந்த பாடல் ஒரு காதல் தோல்வி பாடல் ஆக இருக்கும் என்றும், இந்த பாடலை தனுஷ் பாடியிருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News