கடந்த 2003ம் ஆண்டு கேன்ஸ் நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற இயக்குநர் பயால் கபாடியா இந்த ஆண்டு விழாவில் ஜூரியாக பணியாற்ற இருக்கிறார்.தொடக்க விழாவில் நடிகை ஊர்வசி ரவுட்டேலாதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார் ஊர்வசி. அவர் கையில் இருந்த கிளி வடிவிலான பர்ஸ் பலரையும் கவர்ந்தது. அந்த கிளி பர்ஸின் விலை 4 லட்சத்து 68 ஆயிரம் என்கிறார்கள்.இந்த விழாவில் போட்டி பிரிவிலும், பொது பிரிவிலும் பல இந்திய படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
