தமிழில் “மாநகரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்”, “லியோ” போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் “கூலி” படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்த பின்பு, கார்த்தியின் “கைதி 2” படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
“மாஸ்டர்” படத்திலிருந்து “கூலி” வரை நான்கு படங்களில் அனிருத் இசையமைத்திருந்தாலும், “கைதி 2” படத்திற்கும் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பார்களா எனச் செய்திகள் பரவியன. ஆனால், லோகேஷ் கனகராஜ் மீண்டும் சாம். சிஎஸ்-ஐ இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். “கைதி” படத்தில் இவரின் பின்னணி இசை பெருமளவில் பேசப்பட்டதால், அதே தரத்தை தொடர்ந்து உருவாக்குவதற்காக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்காக அவர், “இந்தியன் 2″ படத்தில் போல இசையமைப்பாளர் மாற்றம் போன்ற தவறுகளை தவிர்க்க வேண்டியது முக்கியம்” என்று திட்டமிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.