மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்துக்குப் பிறகு, தற்போது இயக்குநர் கிரீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛காட்டி’ படத்திலும், மலையாளத்தில் ‛கத்தனார் காட்டு மந்திரவாதி’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதில், ‛காட்டி’ படம் ஜூலை 11ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கவிருக்கும் ‛கைதி-2’ படத்தில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.

இந்த தகவலை தற்போது மறுத்துள்ளார் அனுஷ்கா. “லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி-2’ படத்தில் நடிப்பதற்காக இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. யாரோ இந்தப் போலியான தகவலை பரப்பி இருக்கிறார்கள்,” எனக் கூறி இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்னதாக, இயக்குநர் சுராஜ் இயக்கிய ‛அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படத்தில், கார்த்தி மற்றும் அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.