நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளார். ரஜினிகாந்த் இமயமலையில் ஆன்மீக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார், தற்போது சென்னை திரும்பி ஷூட்டிங்கில் இணையவுள்ளார்.

கூலி படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை வரும் 10ம் தேதி துவங்கி சென்னை மற்றும் ஹைதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட ஷூட்டிங்கில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணைகின்றனர். மேலும் மலையாள நடிகர் திலீப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருகிறது.
