நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படங்கள் சமீபத்தில் வெளியானது. ஜெயிலர் படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது, ஆனால் லால் சலாம் தோல்வியுற்றது. இதற்கிடையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதே த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தமானார்.
இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்பே முடிவுற்றது.அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் இதனை தயாரிக்கின்றது. படத்தின் டைட்டில் டீசர் வெளியானதும் பெரும் வரவேற்பை பெற்றது.
உலகநாயகன் கமலுக்கு கொடுத்த மெகா ஹிட் போல, லோகேஷ் ரஜினிக்கும் மெகா ஹிட் கொடுப்பாரா என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ஷாருக்கானிடம் பேச்சு நடந்ததாம். ஆனால், ஷாருக் ஒப்புக்கொள்ளவில்லை.
பின்னர் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும். முதலில் அவர் ஒப்புக்கொண்டாலும், தமிழில் வில்லனாக நடிப்பது சரியாக இருக்காது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதால், அவர் மறுத்துவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.