ரஜினிகாந்த் இனி இளம் நடிகைகளுடன் நடிப்பதை தவிர்த்து, வயது மிகுந்த நடிகைகளுடன் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.இதற்கு முன் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்தார், மேலும் லால் சலாம் படத்தில் நிரோஷாவுடன் நடித்தார்.
இதேபோல், கூலி படத்திலும் வயது மிக்க நடிகை ஒருவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில், விருமாண்டி அபிராமி கமலுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார், அவரையே கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்று லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் சத்யராஜ், ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் அபிராமியும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.