ரஜினியின் கூலி படத்தில் இருந்து நேற்று வெளியான ‘மோனிகா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. துறைமுகத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்பாடலில் பூஜா ஹெக்டே நடனமாடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அதேசமயம், மற்றொரு பக்கம் தனது அசத்தலான நடனத்தின் மூலம் சௌபின் சாகிரும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சௌபின் சாகிர் இந்தளவு சிறப்பாக நடனமாடுவாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
