Touring Talkies
100% Cinema

Sunday, June 29, 2025

Touring Talkies

‘கூலி’ படத்தின் ‘சிக்கிட்டு’ பாடலின் படப்பிடிப்பு BTS வீடியோ வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ் மற்றும் சுருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே ஒரு சிறப்பு பாடல் காட்சியில் நடனமாடியுள்ளார். படத்தின் முக்கிய படப்பிடிப்பு பணிகள் முழுமையடைந்து, தற்போது கடைசிக் கட்ட வேலைகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இப்படத்தின் முதல் பாடலாக ‘சிக்கிட்டு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அறிவு, அனிருத் மற்றும் டி. ராஜேந்தர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வேகமாக வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்பாடலின் படப்பிடிப்பு BTS வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News