திருப்பாச்சி’ மற்றும் ‘சிவகாசி’ திரைப்படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் பேரரசு, தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலியல் குற்றங்கள் உண்மையாக இருந்தால், கண்டிப்பாக அதை கண்டிக்க வேண்டும். தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால், கண்டனத்தின் மேலும், குற்றவாளியை திரைத்துறையிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
நடிகராக இருந்தால் நடிக்க தடை விதிக்க வேண்டும்; இயக்குநராக இருந்தால் படம் இயக்க தடை விதிக்க வேண்டும்; தயாரிப்பாளராக இருந்தால் படம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும்,” என்றார். “நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மட்டுமே அடுத்தவர் தவறு செய்ய பயப்படுவார்கள். சங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் நடந்தால், நடிகைகள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.