Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

குட் பேட் அக்லி மாஸ் இன்ட்ரோ சாங்-ல் கலக்க போகும் அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் “குட் பேட் அக்லி”. முதலில், அஜித் ஜூன் மாதத்தில் “குட் பேட் அக்லி” படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் தாமதமானதால், அஜித் மே மாதத்திலேயே “குட் பேட் அக்லி” படத்தின் ஷூட்டிங்கில் இணைய நேர்ந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள சாரதி மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோக்களில் நடைபெற்று வருகிறது. சில காட்சிகள் ரிகர்சல் முடித்த பின்பு மட்டும் படமாக்கப்பட்டு வருகின்றன.

அஜித் மூன்று விதமான கேரக்டர்களில் நடிக்கவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் “குட் பேட் அக்லி” படத்தில் அஜித் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதில், “அட்டகாசம்” படத்தின் அஜித் கேரக்டரை பிரதிபலிக்கும் ஒரு கேரக்டர் உள்ளது, இது அஜித்தின் நெகட்டிவ் கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜூன் 3ம் தேதி ஹைதராபாத்தில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கவுள்ளது,

அஜித்தின் மாசான இன்ட்ரோ சாங்கை படக்குழுவினர் சூட் செய்யவுள்ளனர். இதற்காக 250க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக இந்த பாடலுக்கான ரிகர்சல் நடைபெறவுள்ளது என்றும் கூறப்படுகிறது.இந்த படத்தின் முக்கிய காட்சிகளை ரிகர்சல் செய்தபின் மட்டுமே இயக்குநர் படமாக்கி வருகிறார். இதற்கு முன், படத்தின் ஆக்ஷன் காட்சிகளை ரிகர்சல் செய்ததில் அஜித் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை ஃபோக் சாங் பாணியில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உருவாக்கியுள்ளார். பாடலில் கலந்து கொள்பவர்களின் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News