Tuesday, October 1, 2024

குட் பேட் அக்லி படத்துல இந்த பிரபல நடிகரும் நடிக்கிறாரா? யார்னு தெரியுமா? #GoodBadUgly

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘மார்க் ஆண்டணி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்நிலையில், அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் இயக்கி வருகிறார், இதில் அஜித் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார், அவருடன் சுனில் மற்றும் நஸ்லேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில நாட்களுக்கு நடந்தது, அதன் பின்பு படப்பிடிப்பு பணிகள் ஸ்பெயினில் தொடரவுள்ளது. படத்தைப் பற்றிய மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி, திரைப்படத்தில் முன்னதாக அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் மேலும் பிரசன்னா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News