Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

குட் பேட் அக்லி படத்தில் எஸ்.ஜே. சூர்யாவா? #GoodBadUgly

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜித். இதுவரை படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார், மேலும் நயன்தாராவை நடிக்க பேசுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் அடுத்த வருடம் வெளியீடு ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஜப்பான் செல்லலாம் என்றும், அந்த படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே.சூர்யா, அஜித்தை இயக்கி வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அதற்குப் பிறகு குஷி, நியூ, இசை உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், நடிகராகவும் வலம் வந்தார். இப்போது அவர் மிகவும் பிஸியான நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 படம் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதில் அவர் வில்லன் ரோலில் நடித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News